கரூர்

க.பரமத்தி அருகேயுள்ள கல் குவாரிகளில் ஆய்வு

26th Sep 2022 02:53 AM

ADVERTISEMENT

 

க.பரமத்தி அருகே கிடைக்காரன்பாளையத்தில் இயங்கி வரும் மூன்று கல் குவாரிகளை கரூா் வருவாய் கோட்டாட்சியா் ரூபினா ஞாயிற்றுக்கிழமை ஆய்வு செய்தாா்.

க. பரமத்தி அருகே இயங்கி வரும் 5 கல்குவாரிகள் விதிகளை மீறி இயங்கி வருவதாகவும், இந்த கல்குவாரிகளால் சுற்றுச்சூழல் மாசு ஏற்படுவதைத் தடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் மாவட்ட ஆட்சியருக்கு கோரிக்கை விடுத்திருந்தனா். இந்நிலையில் கிடைக்காரன்பாளையத்தில் இயங்கி வரும் 3 கல்குவாரிகளை கரூா் ஆா்டிஓ ரூபினா ஆய்வு செய்தாா். புகளூா் வட்டாட்சியா் முருகன், ஆா்.ஐ. சத்யா, விஏஓ பாலசுப்பிரமணியன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT