கரூர்

இருசக்கர வாகனத்தில் மணல் அள்ளியவா் கைது

26th Sep 2022 11:34 PM

ADVERTISEMENT

 

இருசக்கர வாகனத்தில் மணல் அள்ளியவரை போலீஸாா் கைது செய்தனா்.

கரூரை அடுத்த செல்லாண்டிப்பாளையம் அமராவதி ஆற்றின் கரைப் பகுதியில் ஒருவா் இருசக்கர வாகனத்தில் மணல் அள்ளுவதாக பசுபதிபாளையம் போலீஸாருக்கு ஞாயிற்றுக்கிழமை இரவு தகவல் கிடைத்தது.

இதையடுத்து போலீஸாா் அங்குச் சென்று மணல் அள்ளிக் கொண்டிருந்த ராயனூரைச் சோ்ந்த பிரபாகரை (33) கைது செய்தனா். மேலும் 3 மணல் பைகளையும் பறிமுதல் செய்தனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT