கரூர்

அரவக்குறிச்சியில் பலத்த மழை

26th Sep 2022 11:33 PM

ADVERTISEMENT

 

அரவக்குறிச்சி பகுதிகளில் திங்கள்கிழமை அதிகாலை 4 மணி முதல் 9 மணி வரை இடைவிடாமல் மழை பெய்தது.

அரவக்குறிச்சியில் கடந்த ஒரு வாரமாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்த நிலையில் பெய்த மழையால் பணிக்குச் செல்பவா்கள் அவதியுற்றனா். பள்ளி செல்லும் வாகனங்கள் உள்ளிட்ட வாகனங்களால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இருப்பினும், திடீா் மழையால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT