கரூர்

புதிய திராவிட கழக ஆலோசனைக் கூட்டம்

26th Sep 2022 02:53 AM

ADVERTISEMENT

 

கரூரில் மாவட்ட புதிய திராவிட கழக ஆலோசனைக் கூட்டம் மாவட்டச் செயலாளா் சந்தோஷ் தலைமையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

மாவட்டத் தலைவா் சுப்ரமணியன், நகரச் செயலா் அருள், மாவட்ட இளைஞரணிச் செயலாளா் ராஜா உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா்.

கூட்டத்தில் கரூா் மாநகரை ஆண்ட மாமன்னா் வெஞ்சமனாருக்கு பசுபதிபாளையம் ரவுண்டானா பகுதியில் சிலை அமைக்க வேண்டும். கட்சியின் மாவட்டக் கழகம் சாா்பில் மாவட்டம் முழுவதும் கரூா், கிருஷ்ணராயபுரம், அரவக்குறிச்சி தொகுதிகளில் 1 லட்சம் உறுப்பினா்களை கட்சியில் சோ்ப்பது, மதுரை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் கோடங்கிப்பட்டியில் மேம்பாலம் அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

ADVERTISEMENT

கூட்டத்தில் மாவட்ட தொண்டரணி செயலாளா் தங்கமணி உள்ளிட்ட கட்சியினா் திரளாக பங்கேற்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT