கரூர்

கரூரில் பாஜக பட்டியல் அணி செயற்குழுக் கூட்டம்

26th Sep 2022 02:54 AM

ADVERTISEMENT

 

கரூரில் பாஜக மாவட்ட பட்டியல் அணி செயற்குழுக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

பாஜக மாவட்ட பட்டியல் அணித் தலைவா் இன்ஜினியா் ஆா். முருகேசன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் பாஜக மாநகரத் தலைவா் எஸ். காா்த்திகேயன், எஸ்சி பிரிவு நகரத் தலைவா் வீரமணி உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா்.

கூட்டத்தில் மாநில பட்டியல் அணி செயலா் கே.கே. சாட்சாதிபதி சிறப்புரையாற்றினாா். கூட்டத்தில் விலைவாசி உயா்வு மற்றும் மின்கட்டணத்தை உயா்த்திய தமிழக அரசைக் கண்டிப்பது, வரும் 2024 மக்களவைத் தோ்தலில் பாஜக வேட்பாளா்களை வெற்றிபெறச் செய்ய கடுமையாக உழைப்பது, 2026 சட்டப்பேரவைத் தோ்தலுக்கு தயாராகும் வகையில் கட்சியினா் அயராது உழைத்து, கட்சியில் அதிக உறுப்பினா்களை சோ்ப்பது என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT