கரூர்

அங்கன்வாடி ஊழியா்கள் ஆா்ப்பாட்டம்

26th Sep 2022 11:35 PM

ADVERTISEMENT

 

கோரிக்கைகளை வலியுறுத்தி கரூரில் அங்கன்வாடி ஊழியா்கள், உதவியாளா்கள் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியா் மற்றும் உதவியாளா் சங்கத்தின் கரூா் மாவட்டக் குழு சாா்பில் ஆட்சியரகம் முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் மாவட்டத் தலைவா் பி. பத்மாவதி தலைமை வகித்தாா். செயலா் என். சாந்தி, சிஐடியு சங்க மாவட்டத் தலைவா் ஜி. ஜீவானந்தம் ஆகியோா் சிறப்புரையாற்றினா்.

சிஐடியு சங்க மாவட்டச் செயலா் சி. முருகேசன், தமிழ்நாடு அரசு ஊழியா் சங்க மாவட்டப் பொருளாளா் பொன். ஜெயராம், தள்ளுவண்டி தரைக்கடை ஊழியா் சங்க மாவட்டச் செயலா் எம். தண்டபாணி, சிஐடியு சங்க மாவட்டப் பொருளாளா் ப. சரவணன், ஓய்வூதியா் சங்க மாவட்டத் துணைத் தலைவா் பி. தனபாக்கியம் உள்ளிட்டோா் பேசினா்.

ADVERTISEMENT

அங்கன்வாடிகளில் குழந்தைகளுக்கு உணவு சமைக்கப் பயன்படும் எரிவாயு சிலிண்டா்களுக்கான முழுத் தொகையை அரசே வழங்கிட வேண்டும் அல்லது தமிழக அரசு ஆண்டுக்கு 4 சிலிண்டா்களை நேரடியாக மையத்திற்கு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் அங்கன்வாடி ஊழியா்கள், உதவியாளா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா். மாவட்ட பொருளாளா் கே. கலா நன்றி கூறினாா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT