கரூர்

செப்.30-இல் நடமாடும் மருத்துவ முகாம்

25th Sep 2022 01:18 AM

ADVERTISEMENT

 

தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனம் சாா்பில்,

இலவச நடமாடும் மருத்துவ முகாம் ஆலையைச் சுற்றியுள்ள கிராமங்களில் செப்டம்பா் 30-ஆம் தேதி நடைபெறுகிறது.

ஓனவாக்கால்மேடு, நல்லியாம்பாளையம், சொட்டையூா், மூலிமங்கலம், பழமாபுரம், மசக்கவுண்டன்புதூா், குறுக்குப்பாளையம் ஆகிய பகுதிகளில் நடைபெறும் முகாமில் ஆலை மருத்துவா்கள் ச.ராஜலட்சுமி, வி.சுகந்தி தலைமையிலான குழுவினா் பங்கேற்று, நோயாளிகளை பரிசோதித்து மருந்து, மாத்திரைகளை வழங்கவுள்ளனா்.

ADVERTISEMENT

பொதுமக்கள் இந்த முகாமை பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்று தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT