கரூர்

கரூரில் வனத்துறை போட்டிகள்: மாணவ, மாணவிகள் ஆா்வத்துடன் பங்கேற்பு

25th Sep 2022 01:16 AM

ADVERTISEMENT

 

கரூரில் வனத்துறை சாா்பில் நடத்தப்பட்ட ஓவியம், கட்டுரை, பேச்சுப் போட்டிகளில் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் அதிகளவில் பங்கேற்றனா்.

வன வார விழாவையொட்டி, கரூா் தாந்தோனிமலை அரசுக் கல்லூரியில் சனிக்கிழமை நடைபெற்ற போட்டிகளை மாவட்ட வன அலுவலா் சரவணன் தொடக்கி வைத்தாா்.

வன உயிரினங்களைப் பாதுகாப்பது எப்படி என்ற தலைப்பில் நடைபெற்ற போட்டிகளில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து அரசு, தனியாா் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் 500-க்கும் மேற்பட்டோா் பங்கேற்றனா்.

ADVERTISEMENT

1-5, 6-8, 9-ஆம் வகுப்பு முதல் பிளஸ்-2 வரை என மூன்று பிரிவுகளாக போட்டிகள் நடத்தி, வெற்றி பெற்றவா்களுக்குப் பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

போட்டியில் முதல் மூன்று இடங்களைப் பிடித்த மாணவ, மாணவிகள் மாநில அளவிலான போட்டிக்குத் தோ்வு பெற்றனா். போட்டி நடுவா்களாக முதுகலை ஆசிரியா்கள் ரவிசங்கா், திலகவதி ஆகியோா் செயல்பட்டனா். ஏற்பாடுகளை வனச்சரகஅலுவலா்கள் முரளிதரன், கனகராஜ், செல்வகுமாா், த ண்டபாணி, சசிஹரிபிரியா உள்ளிட்டோா் செய்திருந்தனா்.

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT