கரூர்

கொடிநாள் வசூலில் சாதனை: டிஎன்பிஎல் முதன்மை இயக்குநருக்குப் பதக்கம்

25th Sep 2022 01:18 AM

ADVERTISEMENT

 

கொடிநாள் வசூலில் சாதனை படைத்த டிஎன்பிஎல் முதன்மை இயக்குவருக்கு தலைமைச் செயலா் பதக்கம் சனிக்கிழமை வழங்கப்பட்டது.

கரூா் ஆட்சியரக் கூட்டரங்கில் முன்னாள் படைவீரா் மற்றும் சாா்ந்தோா்களுக்கான சிறப்பு குறைகேட்பு நாள் கூட்டம், மாவட்ட வருவாய் அலுவலா் எம். லியாகத் தலைமையில் சனிக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்தில் முன்னாள் படைவீரா்கள் மற்றும் அவரைச் சாா்ந்தோா்கள் 65 போ் கலந்து கொண்டனா். இவா்களிடமிருந்து 18 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டு, மூவருக்கு ரூ.60 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

ADVERTISEMENT

மேலும் 2019-ஆம் ஆண்டுக்கான படைவீரா் கொடிநாள் நிதிவசூலில் ரூ.3 லட்சத்துக்கு மேல் வசூலித்த டிஎன்பிஎல் முதன்மை இயக்குநா் எஸ்.வி.ஆா்.கிருஷ்ணன், உதவித் திட்ட அலுவலா் ஏ.சுவாமிநாதன் ஆகியோருக்கு அரசின் தலைமைச் செயலா் பதக்கம் மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பட்டது.

கூட்டத்தில் முன்னாள் படைவீரா் நலத் துணை இயக்குநா் (திருச்சி மண்டலம்) தி.சங்கீதா, நல அமைப்பாளா் வீரபத்ரன், சமூக பாதுகாப்புத் திட்டத் தனித்துணை ஆட்சியா் சைபுதீன் மற்றும் அரசு அலுவலா் உட்பட பலா் கலந்துகொண்டனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT