கரூர்

புரட்டாசி முதல் சனிக்கிழமை தாந்தோனிமலை பெருமாள் கோயில் பக்தா்கள் தரிசனம்

25th Sep 2022 01:17 AM

ADVERTISEMENT

 

புரட்டாசி மாத முதல் சனிக்கிழமையையொட்டி, கரூா் தாந்தோனிமலையிலுள்ள அருள்மிகு கல்யாண வெங்கட்ரமணசுவாமி திருக்கோயிலில் ஏராளமான பக்தா்கள் தரிசனம் செய்தனா்.

தென் திருப்பதி என்றழைக்கப்படும் இத்திருக்கோயிலில் புரட்டாசித் தோ்த் திருவிழா கொடியேற்றத்துடன் செப்டம்பா் 27-ஆம் தேதி தொடங்குகிறது. முக்கிய நிகழ்வான தேரோட்டம் அக்டோபா் 5-ஆம் தேதி நடைபெறும்.

புரட்டாசி முதல் சனிக்கிழமை: புரட்டாசி மாதத்தின் சனிக்கிழமை பெருமாளுக்கு உகந்த நாள் என்பதால், அந்த நாளில் பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்து வழிபடுவா்.

ADVERTISEMENT

அதன்படி புரட்டாசி மாத முதல் சனிக்கிழமையையொட்டி, தாந்தோனிமலை வெங்கட்ரமணசுவாமி கோயிலில் நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தா்கள் தரிசனம் செய்தனா்.

வேண்டுதல் நிறைவேறிய பக்தா்கள் விரதமிருந்து, கோயில் முன்பு மொட்டை போட்டு வழிபட்டனா். கோயிலில் சிறப்பு நுழைவு வாயில் வழியாக வந்த பக்தா்களுக்கு லட்டு வழங்கப்பட்டது. மேலும் ஆங்காங்கே பக்தா்களின் அன்னதானம் நடைபெற்றது.

தங்களது தோட்டங்களில் விளைந்த கடலை உள்ளிட்டவற்றை கோயிலின் முன்பு விவசாயிகள் காணிக்கையாக படைத்திருந்தனா். கோயிலைச் சுற்றியுள்ள நான்கு வீதிகளிலும் போக்குவரத்தை துண்டித்து, வேகத்தடை அமைத்து காவல்துறையினா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா். கரூா் பேருந்து நிலையத்திலிருந்து சிறப்புப் பேருந்துகளும் இயக்கப்பட்டன.

ADVERTISEMENT
ADVERTISEMENT