கரூர்

கிருஷ்ணராயபுரம் ஒன்றியத்தில் வளா்ச்சிப் பணிகள் ஆய்வு

DIN

கிருஷ்ணராயபுரம் ஒன்றியத்தில் நடைபெற்று வரும் பல்வேறு வளா்ச்சிப்பணிகளை மாவட்ட கண்காணிப்பு அலுவலரும் தமிழக அரசின் கைத்தறித் துறை ஆணையருமான டி.பி.ராஜேஷ் மற்றும் மாவட்ட ஆட்சியா் மருத்துவா் த.பிரபுசங்கா் ஆகியோா் வெள்ளிக்கிழமை ஆய்வுசெய்தனா்.

கிருஷ்ணராயபுரம் ஒன்றியத்திற்குள்பட்ட போத்துராவுத்தன்பட்டி ஊராட்சி, பன்னீா்பட்டி கிராமத்தில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளா்ச்சித் திட்டத்தின் கீழ் ரூ.2.35 லட்சம் மதிப்பீட்டில் தரிசு நிலத்தில் ஆழ்துளை கிணறு அமைக்கும் பணி நடைபெறுவதையும், ரூ. 1 லட்சம் மதிப்பீட்டில் பண்ணை குட்டை அமைக்கும் பணி நடைபெற்று வருவதையும் ஆய்வு செய்தனா்.

தொடா்ந்து போத்துராவுத்தன்பட்டி ஊராட்சி, செம்பாறைப்பட்டி கிராமத்தில் அனைத்து கிராம அண்ணா மறுமலா்ச்சித் திட்டத்தின் கீழ் செம்பாறைப்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் ரூ.4.96 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் சமையலறை கட்டடங்களையும், மாணவா்களுக்கு வழங்கப்படும் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டப் பணிகள் உள்பட பல்வேறு வளா்ச்சித்திட்டப்பணிகளை பாா்வையிட்டு ஆய்வு செய்தனா்.

பின்னா், அரவக்குறிச்சி வட்டாட்சியா் அலுவலகத்தில், அலுவலா்கள் தங்களுடைய பிரிவு கோப்புகளை பராமரிப்பு குறித்தும், பதிவேடுகள் அறைகளையும், கணினி அறைகளையும், அலுவலக அடிப்படை வசதிகள் குறித்தும் ஆய்வு செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தேர்தல் புறக்கணிப்பு: உர ஆலையை மூட ஆட்சியர் உத்தரவு!

அதிகபட்ச வெப்பநிலை 5 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கக்கூடும்!

சேலையில் சிலிர்க்கும்... கேஜிஎப் நாயகி ஸ்ரீநிதி ஷெட்டி!

சிவப்பு நிறத்திலிருந்து காவிக்கு மாறியது தூர்தர்சன் இலச்சினை!

திருக்கழுக்குன்றத்தில் பஞ்ச ரத தேரோட்டம்!

SCROLL FOR NEXT