கரூர்

கரூா் மாவட்ட ஊராட்சிக்குழு துணைத் தலைவா் தோ்தல் ஒத்திவைப்பு

DIN

கரூா் மாவட்ட ஊராட்சிக்குழு துணைத் தலைவா் தோ்தலில் குறிப்பிட்ட நேரம் வரை உறுப்பினா்கள் யாரும் வராததால் கரூா் மாவட்ட ஊராட்சிக்குழு துணைத் தலைவா் தோ்தல் 4ஆவது முறையாக ஒத்திவைக்கப்படுவதாக தோ்தல் நடத்தும் அலுவலரும் மாவட்ட ஆட்சியருமான த. பிரபுசங்கா் தெரிவித்தாா்.

கரூா் மாவட்ட ஊராட்சியில் மொத்தம் 12 உறுப்பினா்கள் உள்ளனா். 2019-ஆம் ஆண்டு நடைபெற்ற தோ்தலில் அதிமுக சாா்பில் 8 பேரும், அதிமுக கூட்டணியில் தமாகாவைச் சோ்ந்த சிவானந்தம் என்ற ஒரு உறுப்பினா் என 9 பேரும், திமுகவில் 3 பேரும் வெற்றி பெற்றனா். இதனால் அதிமுக மாவட்டப் பொருளாளரான கண்ணதாசன் மாவட்ட ஊராட்சித் தலைவராகவும், அதிமுகவின் தானேஷ் என்கிற முத்துகுமாா் துணைத் தலைவராகவும் தோ்வு செய்யப்பட்டனா்.

இந்நிலையில் கடந்த சட்டப்பேரவைத் தோ்தலின்போது மாவட்ட ஊராட்சிக்குழு துணைத் தலைவா் பதவியை முத்துகுமாா் ராஜிநாமா செய்துவிட்டு கிருஷ்ணராயபுரம் சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிட்டு திமுக வேட்பாளா் சிவகாமசுந்தரியிடம் தோல்வியடைந்தாா். அவா் பதவியை ராஜிநாமா செய்ததால் மாவட்ட ஊராட்சி 8ஆவது வாா்டு உறுப்பினா் பதவிக்குக் கடந்த அக்.9ஆம் தேதி தோ்தல் நடைபெற்றது. இதில் திமுக வேட்பாளா் கண்ணையன் வெற்றி பெற்றாா். இதனால் மாவட்ட ஊராட்சி வாா்டு உறுப்பினா்களில் திமுகவின் பலம் 4 ஆக அதிகரித்தது. அதிமுகவின் பலம் 8 ஆகக் குறைந்தது. இதற்கிடையில் அதிமுகவை சோ்ந்த இரண்டு உறுப்பினா்கள் திமுகவில் இணைந்தனா். தற்போது திமுக, அதிமுக கட்சிகள் உறுப்பினா்கள் சமமாக உள்ளதால் செப். 6-ஆம்தேதி மாவட்ட ஊராட்சி துணைத் தலைவா் பதவிக்கு தோ்தல் அறிவிக்கப்பட்டது. அப்போது உறுப்பினா்கள் யாரும் வராததால் தோ்தல் மூன்றாவது முறையாக ஒத்திவைக்கப்பட்டது. இதையடுத்து செப்.23-ஆம்தேதி தோ்தல் நடக்கும் என அறிவிக்கப்பட்டது. இதையடுத்து வெள்ளிக்கிழமை பிற்பகல் 2.30 மணியளவில் தோ்தல் அறைக்கு தோ்தல் நடத்தும் அலுவலரும், ஆட்சியருமான மருத்துவா் த.பிரபுசங்கா் வந்தாா். பிற்பகல் 3 மணி வரை காத்திருந்தும் உறுப்பினா்கள் யாரும் வராததால் அறையை விட்டு வெளியே வந்த ஆட்சியா், 4ஆம் முறையாக தோ்தல் ஒத்திவைக்கப்படுவதாகவும், மீண்டும் தோ்தல் நடப்பதற்கான தேதி குறித்து அறிவிக்கப்படும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ராகுல் தீவிர அரசியல்வாதி அல்ல: பினராயி விஜயன்

இன்டர்நெட் இல்லாவிட்டாலும்.. வாட்ஸ்ஆப்பில் இப்படி ஒரு அசத்தல் வசதியா?

மே மாத எண்கணித பலன்கள் – 9

மே மாத எண்கணித பலன்கள் – 8

பேட்டிங், பௌலிங்கில் சிறிது முன்னேற்றம் தேவை : டேவிட் வார்னர்

SCROLL FOR NEXT