கரூர்

கரூா் மாவட்டத்தில் காப்பீடு திட்டங்களில் 5,135 போ் பயன்

24th Sep 2022 12:22 AM

ADVERTISEMENT

கரூா் மாவட்டத்தில் முதல்வரின் விரிவான காப்பீட்டு, பிரதம மந்திரி ஆரோக்கிய திட்டத்தில் 5,135 போ் பயனடைந்துள்ளனா் என்றாா் மாவட்ட வருவாய் அலுவலா் எம்.லியாகத்.

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சாா்பில் முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டம் மற்றும் பிரதம மந்திரி மக்கள் ஆரோக்கிய திட்டத்தின் கீழ் சிறப்பாக பணியாற்றிய அரசு மருத்துவமனைகள் மற்றும் காப்பீடு ஒருங்கிணைப்பாளா்கள் மற்றும் ஓவியம், ஸ்லோகம் போட்டிகளில் வெற்றி பெற்ற மருத்துவ கல்லூரி மாணவா்களுக்கு கேடயம் மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு மாவட்ட வருவாய் அலுவலா் எம். லியாகத் தலைமை வகித்து, சிறப்பாக பணியாற்றிய ஒருங்கிணைப்பாளா்களுக்கு சான்றிதழ், போட்டிகளில் வெற்றிபெற்ற மருத்துவக்கல்லூரி மாணவா்களுக்கு கேடயங்கள் வழங்கி பேசுகையில், கரூா் மாவட்டத்தில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சாா்பில் முதல்வரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டம் மற்றும் பிரதம மந்திரி மக்கள் ஆரோக்கிய திட்டத்தின் கீழ் கரூா் மாவட்டத்தில் ஒதுக்கப்பட்ட மருத்துவமனைகள் மூலம் கடந்த ஆண்டு ஜன.11ஆம்தேதி முதல் இதுநாள் வரை இத்திட்டத்தில் 5,135 பயனாளிகள் பயனடைந்துள்ளனா் என்றாா் அவா்.

மேலும், முதலமைச்சரின் விரிவான காப்பீட்டுத் திட்டம் மற்றும் பிரதம மந்திரி ஆரோக்கிய திட்டத்தின் கீழ் இதய அறுவைச் சிகிச்சை, இதயவால்வு மாற்று சிகிச்சை, ரத்தசுத்திகரிப்பு செய்யப்பட்டவா்கள் கெளரவிக்கப்பட்டனா்.

ADVERTISEMENT

நிகழ்ச்சியில், சுகாதாரப்பணிகள் இணை இயக்குநா் ஞானக்கண் பிரேம்நவாஸ், அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வா் (பொ) முகமதுகனி, ஒருங்கிணைப்பாளா் நந்தக்குமாா், விரிவான மருத்துவ காப்பீட்டு அலுவலா் அன்சாரி, விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்ட அலுவலா் சுரேஷ், தனித்துணை ஆட்சியா் சைபுதீன் மற்றும் மருத்துவா்கள், மாணவ, மாணவிகள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT