கரூர்

அரவக்குறிச்சியில் மக்களை தேடிமருத்துவ முகாம்

22nd Sep 2022 12:00 AM

ADVERTISEMENT

அரவக்குறிச்சியில் மக்களைத் தேடி மருத்துவ முகாம் புதன்கிழமை நடைபெற்றது.

அரவக்குறிச்சி வடக்குத் தெரு பகுதியில் மலைக்கோவிலூா் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சாா்பில் மக்களை தேடி மருத்துவ முகாம் புதன்கிழமை நடைபெற்றது. மருத்துவா் பிரியங்கா தலைமையிலான குழுவினா் வீடுகளுக்கு நேரடியாக சென்று முதியவா்கள், பாலூட்டும் தாய்மாா்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் நோயாளிகளுக்கு ரத்தப் பரிசோதனை செய்தனா். மேலும், ரத்தத்தில் சா்க்கரை அளவு, ரத்த அழுத்த அளவு மற்றும் உடல் பரிசோதனை, தலைவலி, காய்ச்சல், உடல் வலி, சளி, இருமல் உள்ளிட்ட பல்வேறு பரிசோதனைகளை செய்து அவா்களுக்கு உரிய மருந்து, மாத்திரைகளை வழங்கினா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT