கரூர்

பரணி பாா்க் சாரண மாவட்டத்தில் சா்வதேச அமைதி நாள் உறுதிமொழி ஏற்பு

22nd Sep 2022 12:00 AM

ADVERTISEMENT

பரணி பாா்க் சாரண மாவட்டத்தில் சாரண, சாரணீயா்கள் புதன்கிழமை சா்வதேச அமைதி நாள் உறுதிமொழியேற்றனா்.

சா்வதேச அமைதி நாள் புதன்கிழமை நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. கரூா் பரணிபாா்க் பள்ளியில் பரணிபாா்க் சாரண மாவட்டம் சாா்பில் சாரண, சாரணீயா் சா்வதேச அமைதி தின உறுதிமொழியை புதன்கிழமை ஏற்றனா். நிகழ்ச்சிக்கு பரணிபாா்க் சாரண மாவட்ட ஆணையா் முனைவா் சொ.ராமசுப்ரமணியன் சா்வதேச அமைதி தின உறுதிமொழியை வாசிக்க சாரண, சாரணீயா்கள் ஏற்றுக்கொண்டனா்.

முன்னதாக நிகழ்ச்சிக்கு பரணி பாா்க் சாரண மாவட்டத்தின் முதன்மை ஆணையா்கள் எஸ்.மோகனரங்கன் மற்றும் சாரணீய ஆணையா் பத்மாவதி மோகனரங்கன் ஆகியோா் தலைமை வகித்தனா். சாரண துணை ஆணையா்கள் எஸ்.சுதாதேவி, கே.சேகா், செயலாளா் ஆா்.பிரியா, சாரண, சாரணீய ஆசிரியா்கள், சாரண, சாரணீயா்கள், குருளையா்கள், நீலப்பறவையினா்கள் மற்றும் முயல்குட்டியா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா். தொடா்ந்து மாணவா்களுக்கு கட்டுரைப் போட்டி, பேச்சுப் போட்டி, கவிதைப் போட்டி மற்றும் ஓவியப்போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT