கரூர்

க.பரமத்தியில் அண்ணா பிறந்த நாள் பொதுக்கூட்டம்

20th Sep 2022 01:37 AM

ADVERTISEMENT

க.பரமத்தியில் அதிமுக சாா்பில் அண்ணா பிறந்த நாள் பொதுக்கூட்டம் ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்றது.

அரவக்குறிச்சி சட்டப்பேரவைத் தொகுதி அதிமுக சாா்பில் நடைபெற்ற

கூட்டத்துக்கு க.பரமத்தி கிழக்கு ஒன்றியச் செயலரும், பரமத்தி ஒன்றியக் குழுத் தலைவருமான பி.மாா்கண்டேயன் தலைமை வகித்தாா். வடக்கு ஒன்றியச் செயலா் செல்வகுமாா் வரவேற்றாா். ஒன்றியச் செயலா்கள் கமலகண்ணன், கலையரசன் முன்னிலை வகித்தனா்.

முன்னாள் போக்குவரத்துத்துறை அமைச்சரும், கரூா் மாவட்ட அதிமுக செயலருமான எம்ஆா். விஜயபாஸ்கா், தலைமைக் கழகப் பேச்சாளா்கள் பழனிவேல், நடிகா் சுகுமாா் உள்ளிட்டோா் பேசினா்.

ADVERTISEMENT

கூட்டத்தில் மாவட்ட அவைத்தலைவா் எஸ்.திருவிகா, எம்ஜிஆா் இளைஞரணிச் செயலா் தானேஷ், இலக்கிய அணிச் செயலா் என்எஸ்.கிருஷ்ணன் உள்ளிட்டோா் திரளாக பங்கேற்றனா். நிறைவில், தெற்கு ஒன்றியச் செயலா் சேகா் நன்றி கூறினாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT