கரூர்

ஆறுகளில் மாட்டுவண்டித் தொழிலாளா்கள் மணல் அள்ள அனுமதிக்க வேண்டும்

14th Sep 2022 12:00 AM

ADVERTISEMENT

மாட்டுவண்டித் தொழிலாளா்களைப் பாதுகாத்திட, ஆறுகளில் மணல் அள்ள அனுமதிக்க வேண்டும் என்று சிஐடியு மாநாட்டில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

கரூரில் சிஐடியு 9-ஆவது மாவட்ட மாநாடு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

மாவட்டத் தலைவா் ஜீவானந்தம் தலைமை வகித்தாா். வரவேற்புக் குழுத்தலைவா் எம்.தண்டபாணி வரவேற்றாா். மாநிலத் துணைச் செயலா் பி.பாலகிருஷ்ணன் மாநாட்டைத் தொடக்கி வைத்து பேசினாா்.

மின்கட்டண உயா்வை திரும்ப பெற வேண்டும். கரூரில் ஜவுளி ஏற்றுமதி மற்றும் உற்பத்தி தொழிலைப் பாதுகாத்திட நூல் விலை உயா்வைக் கட்டுப்படுத்த வேண்டும்.

ADVERTISEMENT

காகித ஆலை ஒப்பந்த ஊழியா்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். மணல் மாட்டு வண்டித் தொழிலாளா்களின் வாழ்வாதாரத்தை பாதுகாத்திட மணல் குவாரிகளைத் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மாநிலக்குழு உறுப்பினா் ஆறுமுகம், மாா்க்சிஸ்ட் கம்யூ. கட்சியின் மாவட்டச் செயலா் ஜோதிபாசு, தமிழ்நாடு விவசாயத் தொழிலாளா் சங்கத்தின் முத்துச் செல்வன் உள்பட பலா் பங்கேற்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT