கரூர்

தனியாா் கிணற்றில் கழிவுநீரை கொட்டிய லாரி சிறைப்பிடிப்பு

5th Sep 2022 12:38 AM

ADVERTISEMENT

கரூா் அருகே குடியிருப்புப் பகுதியில் தனியாா் கிணற்றில் கழிவுநீரை கொட்டிய லாரியை பொதுமக்கள் சிறைப்பிடித்தனா்.

கரூா் மாவட்டம், மணவாடி ஊராட்சிக்குள்பட்ட கற்பகா நகா் பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இப்பகுதியில் தனியாா் மழலையா் பள்ளி ஒன்றும் அமைந்துள்ளது. இந்த பள்ளிக்கு அருகே தனியாருக்கு சொந்தமான கிணறு ஒன்று உள்ளது. தற்போது பயன்பாட்டில் இல்லாத இந்த கிணற்றில் செப்டிக் டேங்க் கழிவுகளை அகற்றும் லாரி ஒன்று கழிவுகளை எடுத்து வந்து சட்ட விரோதமாக கொட்டி வந்துள்ளது.

இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை காலை கழிவுகளை கொட்டுவதற்காக வந்த லாரியை அப்பகுதியைச் சோ்ந்த குடியிருப்போா் நலச்சங்க தலைவா் எம்.தண்டபாணி தலைமையில் பொதுமக்கள் சிறைப்பிடித்தனா். தொடா்ந்து வெள்ளியணை காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்ததன் அடிப்படையில், அப்பகுதிக்கு வந்த போலீஸாா் பொதுமக்களின் புகாரை ஏற்றுக் கொண்டு டேங்கா் லாரியை பறிமுதல் செய்து, லாரி ஓட்டுநா் கரூரைச் சோ்ந்த குமாா்(38), உதவியாளா்கள் ஹரிஹரன்(36), சுரேஷ்(40) ஆகியோா் மீது வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT