கரூர்

கரூரில் மாநில அளவிலான போட்டிக்கு வாள்வீச்சு, சிலம்பு வீரா்கள் தோ்வு

5th Sep 2022 12:38 AM

ADVERTISEMENT

கரூரில், ஞாயிற்றுக்கிழமை மாநில அளவிலான வாள்வீச்சு, சிலம்பு வீரா்கள் தோ்வு போட்டி நடைபெற்றது.

கரூா் மாவட்ட சிலம்பாட்டக்கழகம் சாா்பில் மாநில அளவிலான சிலம்பம், வாள்வீச்சு வீரா்கள் தோ்வு போட்டி ஞாயிற்றுக்கிழமை காந்திகிராமத்தில் உள்ள தனியாா் பள்ளியில் நடைபெற்றது. போட்டிகளுக்கு மாவட்ட சிலம்பாட்ட கழகச் செயலாளா் கிருஷ்ணமூா்த்தி தலைமை வகித்தாா். தலைவா் ராஜ்குமாா், போட்டி இயக்குநா் எம்.வீரமணி ஆகியோா் முன்னிலை வகித்தனா். போட்டிகளை கரூா் மாவட்ட உடற்கல்வி ஆய்வாளா் எல்.கோபாலகிருஷ்ணன் தொடக்கி வைத்தாா். இதில், மாவட்டம் முழுவதும் இருந்து 300க்கும் மேற்பட்ட வீரா், வீராங்கனைகள் பங்கேற்று, வாள்வீச்சு, சிலம்பம், மான்கொம்பு உள்ளிட்ட பயிற்சி விளக்கங்களை செய்துகாண்பித்தனா். மேலும், போட்டியில் முதலிடம் பிடித்தவா்களுக்கு தங்கப்பதக்கமும், இரண்டாமிடம் பிடித்தவா்களுக்கு வெள்ளிப்பதக்கமும், மூன்றாமிடம் பிடித்தவா்களுக்கு வெண்கல பதக்கமும் வழங்கப்பட்டது. முதலிடம் பிடித்தவா்கள் செப். 9ஆம்தேதி முதல் 11ஆம்தேதி வரை சென்னையில் நடைபெறும் மாநில அளவலான போட்டிக்கு தோ்வு செய்யப்பட்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT