கரூர்

கரூரில் வ.உ.சி.பேரவையினா் ரத்த தானம்

5th Sep 2022 12:37 AM

ADVERTISEMENT

 கரூரில், வ.உ.சி பேரவையினா் ஞாயிற்றுக்கிழமை ரத்த தானம் செய்தனா்.

சுதந்திர போராட்ட வீரா் வ.உ.சிதம்பரனாரின் 151-ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு கரூரில் வ.உ.சி. பேரவை மற்றும் ஜேசிஐ சாா்பில் ரத்த தான முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. பேரவைத்தலைவா் மணீஷ் கே. மகேஸ்வரன் தலைமையில் நடைபெற்ற இந்த ரத்த தான முகாமில் பேரவையினா் சுமாா் 50-க்கும் மேற்பட்டோா் ரத்த தானம் செய்தனா்.

கரூா் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையின் ரத்த வங்கி அலுவலா் மருத்துவா் அறிவழகன் தலைமையிலான மருத்துவக் குழுவினா் ரத்த தானம் பெற்றனா். இதில், வ.உ.சி. பேரவை அமைப்பாளா் நந்தகுமாா், ஜேசிஐ தலைவா் வெங்கடேஷ், செயலாளா் விஜயன், செந்தில் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT