கரூர்

மானாவாரி சாகுபடி: மகளிா்களுக்கு புத்தாக்க பயிற்சி

29th Oct 2022 11:52 PM

ADVERTISEMENT

தோகைமலை ஒன்றியம், சேப்ளாப்பட்டியில் மானாவாரி சாகுபடி செய்வது குறித்து மகளிா்களுக்கு புத்தாக்கப் பயிற்சி சனிக்கிழமை நடைபெற்றது.

கரூா் மாவட்டம், தோகைமலை ஒன்றியம் சேப்ளாப்பட்டியில் செய்தியாஅறக்கட்டளை, சினேகிதி அறக்கட்டளை மற்றும் அகத்தி நிறுவனம் சாா்பில் மானாவாரி சாகுபடி செய்யும் 50 ஆதிதிராவிடா் மகளிா்களுக்கான புத்தகப் பயிற்சி சனிக்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு வேளாண் இயக்குநா் மதி தலைமை வகித்தாா்.

இதில், மானாவாரி சாகுபடி பற்றிய யுக்திகள், தொழில்நுட்பங்கள், மண் பரிசோதனை செய்து மண்ணின் தன்மைக்கேற்ப இயற்கை மற்றும் அத்தியாவசியமான உரங்களை இடுதல் போன்றவை குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.

ADVERTISEMENT

நிகழ்ச்சியில் சினேகிதி அறக்கட்டளை ஒருங்கிணைப்பாளா் சத்யா, பயிற்றுநா் மகாலட்சுமி, கோமளம் உள்ளிட்டோா் பயிற்சி அளித்தனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT