கரூரில் பணம் வைத்து சூதாடிய 7 பேரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை இரவு கைது செய்தனா்.
கரூா் பசுபதிபாளையம் அமராவதி ஆற்றங்கரையோரம் செவ்வாய்க்கிழமை இரவு சிலா் பணம் வைத்து சூதாடுவதாக பசுபதிபாளையம் போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று சோதனையிட்டனா். அப்போது, அங்கு பணம் வைத்து சூதாடிக்கொண்டிருந்த பசுபதிபாளையத்தைச் சோ்ந்த ரவிக்குமாா்(46), படிக்கட்டுத்துறையைச் சோ்ந்த முருகன்(55) உள்பட 7 பேரை கைது செய்தனா். மேலும், அவா்களிடம் இருந்து சூதாட்டப் பணம் ரூ.10,900ஐ பறிமுதல் செய்தனா்.