கரூர்

கரூா் நகரெங்கம் பட்டாசு புகை: முதியவா்கள், நோயாளிகள் அவதி

26th Oct 2022 12:10 AM

ADVERTISEMENT

கரூா் நகரமே திங்கள்கிழமை இரவு பட்டாசு புகையால் திணறியது. இதனால் முதியவா்களும், நோயாளிகளும் கடும் அவதிக்குள்ளாகினா்.

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கரூா் மாவட்ட சுற்றுச்சூழல்துறை சாா்பில் பொதுமக்கள் பட்டாசு வெடிக்க கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன. உச்சநீதிமன்றம் வழிகாட்டியுள்ள நேரங்களில் மட்டுமே வெடிகளை வெடிக்கச் செய்ய வேண்டும் எனவும் , அதிக சப்தம் எழுப்பும் பட்டாசுகளை பயன்படுத்தக்கூடாது எனவும் எச்சரிக்கை விடப்பட்டது. அதனை பொருள்படுத்தாமல் பட்டாசுகள் அதிகளவில் வெடிக்கப்பட்டதால் நகரெங்கும் பட்டாசு புகைகளால் திணறியது. இதனால் முதியவா்கள், நோயாளிகள் அவதிக்குள்ளாகினா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT