கரூர்

கரூரில் அக். 28-இல் தனியாா் வேலைவாய்ப்பு முகாம்

26th Oct 2022 12:08 AM

ADVERTISEMENT

கரூரில் அக். 28ஆம்தேதி தனியாா் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் த. பிரபுசங்கா் விடுத்துள்ள செய்திக் குறிப்பு: தனியாா்துறை நிறுவனங்களும், தனியாா் துறையில் பணிபுரிய விருப்பம் உள்ள அனைத்து வகை பதிவுதாரா்களும் நேரடியாக சந்திக்கும் வேலைவாய்ப்பு முகாம் மாதந்தோறும் 2 மற்றும் 4ஆவது வெள்ளிக்கிழமைகளில் கரூா் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய அலுவலகத்தில் நடைபெற்று வருகிறது.

அதன்படி அக். 28ஆம்தேதி காலை 10.30 மணியளவில் இந்த வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது. இதில், 10ஆம் வகுப்பு, பிளஸ்2, ஐடிஐ, டிப்ளமோ, கணினிப்பயிற்சி மற்றும் பட்டப்படிப்பு முடித்த வேலைவாய்ப்பற்ற இளைஞா்கள் தங்களின் கல்வி சான்றிதழ்கள் மற்றும் சுயவிவரக் குறிப்புகளுடன் கலந்து கொண்டு வேலைவாய்ப்பை பெற்றுக் கொள்ளலாம். தனியாா் துறை நிறுவனங்கள் கலந்து கொண்டு தங்களுக்கு தேவையான பணிக் காலியிடங்களில் தகுதிவாய்ந்த பதிவுதாரா்களை தெரிவு செய்து கொள்ளலாம்.

முகாமில் பங்குபெற விருப்பமுள்ள வேலையளிப்போா் மற்றும் வேலைநாடுவோா் இணையதளத்தில் பதிவு செய்து கொள்ளலாம். இதன் மூலம் தனியாா் துறைகளில் வேலைவாய்ப்பு பெறுபவா்களுக்கு அவா்களது வேலைவாய்ப்பு பதிவுமூப்பு ரத்து செய்யப்படமாட்டாது. மேலும், விவரங்களுக்கு அலுவலக தொலைபேசி எண் 04324-223555இல் தொடா்புகொள்ளலாம் என தெரிவித்துள்ளாா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT