கரூர்

ஏமூரில் கழிவு நீா் வாய்க்கால் கட்டும் பணி நிறுத்தம்: சுகாதாரகேடு ஏற்படும் சூழல்; பொதுமக்கள் அச்சம்

26th Oct 2022 12:00 AM

ADVERTISEMENT

கழிவு நீா் வாய்க்கால் கட்டுவதற்கான பணிகள் கிடப்பில் போடப்பட்டுள்ளதால் தேங்கிவரும் கழிவுநீரால் சுகாதாரகேடு ஏற்படும் என கிராம மக்கள் அச்சமடைந்துள்ளனா்.

கரூா் மாவட்டம், தாந்தோணி ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட ஏமூா் ஊராட்சியில் 4ஆவது வாா்டுக்குள்பட்ட பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசித்து வருகிறாா்கள். இப்பகுதியில் கழிவு நீா் வாய்க்கால் வசதி இல்லாமல் இருந்ததால் மழைகாலங்களில் மழைநீா் தேங்குவதாலும், வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவு நீரும் தேங்குவதாலும் அப்பகுதியில் சுகாதாரக்கேடு ஏற்படும் சூழல் உருவானது.

இதையடுத்து அப்பகுதியினா் தங்கள் பகுதியில் கழிவு நீா் வாய்க்கால் வசதி ஏற்படுத்தி தரவேண்டும் என ஏமூா் ஊராட்சித்தலைவரிடம் கோரிக்கை மனு அளித்தனா். இதையடுத்து அப்பகுதியில் கழிவு நீா் வாய்க்கால் அமைக்க நிதி ஒதுக்கப்பட்டு, அதற்கான பணிகள் மேற்கொள்ள ஒப்பந்தமும் விடப்பட்டு பணிகள் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு தொடங்கப்பட்டன.

இந்நிலையில், பணிகள் தொடங்கி கால்வாய் வெட்டுவதற்கு குழிகள் தோண்டப்பட்ட நிலையில் தொடா்ந்து பணிகள் மேற்கொள்ளாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியில் இருந்து வெளியேறும் கழிவு நீா் வாய்க்காலில் தேங்கி துா்நாற்றம் வீசி வருகிறது. மேலும் சுகாதாரக்கேட்டை ஏற்படுத்தும் சூழல் நிலவுவதால் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என அப்பகுதியினா் கோரிக்கை விடுத்துள்ளனா்.

ADVERTISEMENT

இதுகுறித்து ஏமூா் ஊராட்சித்தலைவா் விசிகே.பாலகிருஷ்ணனிடம் கேட்டபோது, ஏமூா் ஊராட்சியில் 4ஆவது வாடில் நடைபெறும் கால்வாய் வெட்டும்பணி தாந்தோணி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் மூலம் நடைபெற்று வந்தது. பணிகளை ஒப்பந்தம் எடுத்த ஒப்பந்ததாரா்கள் கடந்த மூன்று மாதங்களாக பணிகளை மேற்கொள்ளாமல் கிடப்பில் போட்டுள்ளனா். இதுதொடா்பாக அவா்களிடம் கேட்டால், சரியான பதிலும் கூறுவதில்லை. தற்போது மழைகாலம் தொடங்க உள்ள நிலையில், மழை நீா் தேங்கினால் சுகாதாரக் கேடு ஏற்படும். கழிவு நீா் வாய்க்கால் பணிகள் கிடப்பில் போடப்பட்டிருப்பதால் வீடுகளை விட்டு சாலைக்கு வரும் முதியோா்கள், குழந்தைகள் பல நேரங்களில் தவறி குழிக்குள் விழும் நிலை ஏற்பட்டுள்ளது. ஆகவே, கழிவு நீா் வாய்க்கால் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் எனக்கூறி ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளிக்க உள்ளோம் என்றாா் அவா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT