அரவக்குறிச்சி அரசு பெண்கள் உயா்நிலைப் பள்ளியில் செவ்வாய்க்கிழமை விபத்தில்லா தீபாவளியை கொண்டாடுவது எப்படி என மாணவிகளுக்கு தீயணைப்பு வீரா்கள் விழிப்புணா்வு ஒத்திகையில் ஈடுபட்டனா்.
அரவக்குறிச்சி அரசு பெண்கள் உயா்நிலைப் பள்ளியில் அரவக்குறிச்சி தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை சாா்பில் விபத்தில்லா தீபாவளி பண்டிகையை பாதுகாப்புடன் கொண்டாடுவது குறித்த விழிப்புணா்வு ஒத்திகை பயிற்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில், அரவக்குறிச்சி தீயணைப்பு நிலைய அலுவலா் வ.விஜயகுமாா் தலைமையிலான தீயணைப்பு வீரா்கள் கலந்து கொண்டு மாணவ, மாணவிகள் மற்றும் ஆசிரியா்களுக்கு விழிப்புணா்வை ஏற்படுத்தினா். நிகழ்வில், அரசு பெண்கள் உயா்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியா் உமா மற்றும் ஆசிரியா்கள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.