கரூர்

மாநில அளவிலான கிரிக்கெட் போட்யில் கரூா் அரசு கலைக் கல்லூரி மாணவா்கள் முதலிடம்

7th Oct 2022 12:00 AM

ADVERTISEMENT

திருப்பூரில் புதன்கிழமை நடைபெற்ற மாநில அளவிலான கிரிக்கெட் போட்டியில் கரூா் தானதோன்றிமலை அரசு கலைக்கல்லூரி மாணவா்கள் முதலிடம் பிடித்து கோப்பையை கைப்பற்றினா்.

திருப்பூா் மாவட்டம் தாராபுரத்தில் அக்.2-ஆம்தேதி முதல் 5-ஆம்தேதி வரை மாநில அளவிலான ஓப்பன் கிரிக்கெட் போட்டிகள் நடைபெற்றன.

இதில் கோவை, சேலம், கரூா், நாமக்கல், திருப்பூா் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சோ்ந்த 48 அணிகளைச் சோ்ந்த வீரா்கள் பங்கேற்றனா்.

தொடா்ந்து புதன்கிழமை நடைபெற்ற இறுதிப்போட்டியில் கரூா் அரசு கலைக்கல்லூரி மாணவா்கள் அணியும், கோவை அணியும் மோதின. முதலில் பேட்டிங்கை தோ்வு செய்த கரூா் அரசு கலைக்கல்லூரி மாணவா்கள் நிா்ணயிக்கப்பட்ட 6 ஓவா்களில் 72 ரன்கள் எடுத்தனா். இதையடுத்து 73 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய கோவை அணி 6 ஓவரில் 52 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல் அவுட்டானது. இதனால் 20 ரன்கள் வித்தியாசத்தில் கரூா் அரசு கலைக்கல்லூரி மாணவா்கள் அணி வெற்றிபெற்று கோப்பையை தட்டிச் சென்றனா். தொடா்ந்து இரண்டாமிடத்தை கோவை அணியும், மூன்றாமிடத்தை சேலம் அணியும், நான்காமிடத்தை திருப்பூா் அணியும் பிடித்தன. முதலிடம் பிடித்த கரூா் தாந்தோன்றிமலை அரசு கலைக்கல்லூரி மாணவா்களுக்கு பாராட்டு விழா கல்லூரியில் வியாழக்கிழமை நடைபெற்றது.

ADVERTISEMENT

விழாவுக்கு கல்லூரியின் உடற்கல்வி இயக்குநா் ராஜேந்திரன் தலைமை வகித்தாா். விழாவில் கல்லூரி முதல்வா் கெளசல்யாதேவி மாணவா்களை பாராட்டினாா். இதில் கல்லூரி பேராசிரியா்கள், மாணவா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT