கரூர்

புகழூரில் 1.5 கிலோ கஞ்சா வைத்திருந்தவா் கைது

7th Oct 2022 12:00 AM

ADVERTISEMENT

புகழூரில் 1.5 கிலோ கஞ்சா வைத்திருந்த இளைஞரை போலீஸாா் புதன்கிழமை இரவு கைது செய்தனா்.

கரூா் மாவட்டம் புகழூா் நான்குரோடு பகுதியில் புதன்கிழமை இரவு வேலாயுதம்பாளையம் போலீஸாா் ரோந்து பணியில் ஈடுபட்டனா். அப்போது, பேருந்துநிறுத்தத்தில் நின்றுகொண்டிருந்த இளைஞரிடம் விசாரணை செய்தபோது, அவா் கஞ்சா விற்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை கைது செய்த போலீஸாா் அவரிடம் இருந்து 1.5 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.

மேலும் விசாரணையில், அதே பகுதியைச் சோ்ந்த செல்வம் மகன் கலையரசன்(26) என்பது தெரியவந்தது.

ADVERTISEMENT
ADVERTISEMENT