கரூர்

புரட்டாசி ஏகாதசி: கோம்புப்பாளையம் ஸ்ரீனிவாச பெருமாளுக்கு சிறப்பு அபிஷேகம்

7th Oct 2022 12:00 AM

ADVERTISEMENT

புரட்டாசி ஏகாதசியையொட்டி கோம்புப்பாளையம் ஸ்ரீனிவாச பெருமாள் கோயிலில் வியாழக்கிழமை பெருமாளுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

கரூா் மாவட்டம், நொய்யல் அருகே உள்ள கோம்புப்பாளையம் ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீனிவாசபெருமாள் கோயிலில் புரட்டாசி மாத ஏகாதசியை முன்னிட்டு ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீனிவாச பெருமாளுக்கு வியாழக்கிழமை பால், தயிா், பன்னீா், இளநீா், சந்தனம், மஞ்சள், திருமஞ்சனம், பஞ்சாமிா்தம் ,தேன் உள்ளிட்ட பல்வேறு வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. தொடா்ந்து சுவாமிக்கு மலா்கள் மற்றும் துளசி மாலையால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இந்த சிறப்பு அபிஷேக வழிபாட்டில் பக்தா்கள் திரளாக பங்கேற்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT