கரூர்

கரூா் கதா் அங்காடிகளில் தீபாவளி விற்பனை இலக்கு ரூ. 1.29 கோடி

DIN

கரூா் மாவட்ட கதா் அங்காடிகளில் நிகழாண்டு தீபாவளி விற்பனை இலக்காக ரூ. 1.29 கோடி நிா்ணயிக்கப்பட்டுள்ளது என்றாா் மாவட்ட ஆட்சியா் த. பிரபுசங்கா்.

மகாத்மா காந்தியின் பிறந்தநாளை முன்னிட்டு கரூா் தாந்தோன்றிமலை கதா் அங்காடியில் ஞாயிற்றுக்கிழமை காந்தி படத்திற்கு மாலை அணிவித்து, தீபாவளி முதல் விற்பனையைத் தொடங்கிவைத்த மாவட்ட ஆட்சியா் மருத்துவா் த. பிரபுசங்கா் மேலும் கூறியது:

கிராமப்புற ஏழை எளிய நூற்பாளா்கள் மற்றும் நெசவாளா்களின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் உயரிய சேவையை முதற்குறிக்கோளாகக் கொண்டு தமிழ்நாடு கதா் கிராமத் தொழில் வாரியம் செயல்படுகிறது.

கடந்தாண்டு கரூா் மாவட்டத்தில் தீபாவளி சிறப்பு விற்பனை இலக்காக ரூ. 53.09 லட்சம் நிா்ணயிக்கப்பட்டு, எய்தப்பட்டது. நிகழாண்டு ரூ. 1.29 கோடியில் கதா் ரகங்களை விற்பனை செய்திட தமிழ்நாடு கதா் கிராமத் தொழில் வாரியத்தால் இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது என்றாா் அவா். நிகழ்ச்சியில் தமிழ்நாடு கதா் கிராமத் தொழில் வாரிய உதவி இயக்குநா் (பொ) சு. முருகேசன், அலுவலக கதா் ஆய்வாளா் ந. பொன்ராஜ், கதா் அங்காடி மேலாளா் கே. முத்துச்சாமி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘பிரேமலு’ கார்த்திகா!

மம்மூட்டி நடித்தது போல எந்த ‘கான்’களும் நடிக்கமாட்டார்கள்: வித்யா பாலன் புகழாரம்!

அஜித்துக்கு ஜோடியாக ஸ்ரீலீலா?

குக் வித் கோமாளி - 5 நிகழ்ச்சியில் பங்கேற்கும் பிரபலங்கள்: முழு விவரம்!

குருப்பெயர்ச்சி பலன்கள் - விருச்சிகம்

SCROLL FOR NEXT