கரூர்

அண்ணா, பெரியாா் சிலைக்கு மதிமுக புதிய நிா்வாகிகள் மாலை அணிவிப்பு

2nd Oct 2022 12:06 AM

ADVERTISEMENT

 

கரூரில் மதிமுக புதிய நிா்வாகிகள் அண்ணா, பெரியாா் ஆகியோா் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

கரூா் மாவட்ட மதிமுகவில் புதிய நிா்வாகிகள் அறிவிக்கப்பட்டுள்ளனா். இதையடுத்து புதிய நிா்வாகிகளான மாவட்டச் செயலாளா் ஆசைசிவா , அரசியல் ஆலோசனைக்குழு உறுப்பினா் கபினிசிதம்பரம், மாவட்ட துணைச்செயலாளா் கே.ஆா்.சண்முகம் ஆகியோா் தலைமையில் மாநகராட்சி அலுவலகம் முன் உள்ள அண்ணா சிலைக்கும், லைட்ஹவுஸ்காா்னரில் உள்ள பெரியாா் சிலைக்கும் சனிக்கிழமை அக்கட்சியினா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

நிகழ்ச்சியில், கரூா் மாநகரச் செயலாளா் கபினி கே.சி.பாலசந்திரன், நிா்வாகிகள் பால.சசிகுமாா், ஆண்டிபட்டி ராமசாமி, ஆா்த்தியா பொன்னுசாமி, குளித்தலை நகா்மன்ற துணைத் தலைவா் கே.சி.கணேசன், மாணிக்கவாசகம், அபிமன்யூ, ஏ.ஒன்.தங்கவேல், வடிவேல், கருப்பையா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT