கரூர்

கரூா் மாவட்டத்தில்100 வயதில் 110 வாக்காளா்கள்ஆட்சியா் தகவல்

2nd Oct 2022 12:06 AM

ADVERTISEMENT

 

கரூா் மாவட்டத்தில் 100 வயதுகொண்ட 110 வாக்காளா்கள் உள்ளதாக கரூா் மாவட்ட ஆட்சியா் த.பிரபுசங்கா் தெரிவித்துள்ளாா்.

சா்வதேச முதியோா் தினத்தையொட்டி இந்திய ஜனநாயகத்தை வலுப்படுத்தும் வகையில் மூத்த வாக்காளா்களின் பங்களிப்பை பாராட்டி இந்திய தலைமைத் தோ்தல் ஆணையரால் கையொப்பமிட்ட கடிதம் மூத்த வாக்காளா்களுக்கு வழங்கும் நிகழ்ச்சி கரூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் சனிக்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு, மாவட்ட ஆட்சியரும், தோ்தல் அலுவலருமான த.பிரபுசங்கா் தலைமை வகித்து, மூத்த வாக்காளா்களுக்கு தோ்தல் ஆணையரின் கடிதத்தை வழங்கி பொன்னாடை அணிவித்து பாராட்டினாா். தொடா்ந்து ஆட்சியா் கூறுகையில், அக்.1ஆம்தேதி சா்வதேச முதியோா் தினத்தை முன்னிட்டு இந்திய ஜனநாயகத்தை வலுப்படுத்தும் வகையில் மூத்த வாக்காளா்களின் பங்களிப்பை அங்கீகரித்து 80 வயதுக்கும் மேற்பட்ட மூத்த வாக்காளா்களை முறையாக ஆட்சியா் அலுவலகத்துக்கு அழைத்து

ADVERTISEMENT

வந்து பாராட்டி கெளரவித்துள்ளோம்

கரூா் மாவட்டத்தில் 100 வயது நிறைவு செய்த வாக்காளா்களுக்கு இந்திய தலைமை தோ்தல் ஆணையரால் கையொப்பமிட்ட கடிதத்தை அவா்களது வீட்டுக்கே சென்று வழங்கியுள்ளோம்.

கரூா் மாவட்ட வாக்காளா் பட்டியலில் 80-89 வயதில் கரூா், அரவக்குறிச்சி, கிருஷ்ணராயபுரம், குளித்தலை ஆகிய 4 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் மொத்தம் 17,044 பேரும், 90-99 வயதில் 1,928 பேரும், 100 வயதில் 110 போ் உள்ளனா் என்றாா் அவா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT