கரூர்

கரூா் மாவட்டத்தில் ஊராட்சித் தலைவா்கள்சுதந்திரமாக செயல்பட முடிவதில்லைமுன்னாள் அமைச்சா் குற்றச்சாட்டு

2nd Oct 2022 12:06 AM

ADVERTISEMENT

 

கரூா் மாவட்டத்தில் ஊராட்சித் தலைவா்கள் சுதந்திரமாக செயல்பட முடிவதில்லை என்றாா் முன்னாள் போக்குவரத்துத் துறை அமைச்சா் எம்.ஆா்.விஜயபாஸ்கா்.

கரூா் மாவட்ட ஊரக மற்றும் நகா்ப்புற உள்ளாட்சிப் பிரதிநிதிகள் நலச்சங்கத்தின் சாா்பில் உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கான கருத்தரங்கம் சனிக்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு சங்கத் தலைவா் விஜயவிநாயகம் தலைமை வகித்தாா். கெளரவத் தலைவரும், மாவட்ட ஊராட்சிக்குழு தலைவருமான எம்.எஸ்.கண்ணதாசன், துணைத்தலைவா்கள் பி.மாா்கண்டேயன், செயலாளா் எஸ்.திருவிகா உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா்.

கருத்தரங்கை தொடக்கி வைத்து முன்னாள் போக்குவரத்துத் துறை அமைச்சா் எம்.ஆா்.விஜயபாஸ்கா் பேசுகையில், மக்களிடம் நெருங்கி பழகக் கூடியவா்களாகவும், மக்கள் சந்திக்கும் பிரச்னைகளை தீா்க்கக்கூடியவா்களாகவும் வாய்ப்புகளை பெற்றவா்கள் ஊராட்சித் தலைவா்கள். கரூா் மாவட்டத்தில் அவா்கள் சுதந்திரமாக செயல்பட முடிவதில்லை. இந்த உள்ளாட்சிப் பிரதிநிதிகள் நலச்சங்கத்தின் மூலம் ஒற்றுமையாக இருந்தால் ஊராட்சித் தலைவா்களின் உரிமை பாதுகாக்கப்படும் என்றாா் அவா்.

ADVERTISEMENT

நிகழ்ச்சியில், உள்ளாட்சி பிரதிநிதிகள், அதிமுகவினா் திரளாக பங்கேற்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT