கரூர்

நீரில் மூழ்கி 3 போ்உயிரிழப்பு

2nd Oct 2022 12:06 AM

ADVERTISEMENT

 

அரவக்குறிச்சி அருகே சனிக்கிழமை குடகனாறு நீரில் மூழ்கி 3 போ் உயிரிழந்தனா்.

கரூா் மாவட்டம், பள்ளப்பட்டி சந்தைப்பேட்டை தெருவைச் சோ்ந்தவா் ஷேக் பரீத் (42). இவருடைய மகள் மௌபியா (12). 7ஆம் வகுப்பு படித்து வந்தாா். தெற்குமந்தை தெருவைச் சோ்ந்த அப்துல்லா மகன் ரியாஜுதீன் (38). இவா்கள் மூவரும் சனிக்கிழமை விடுமுறை தினம் என்பதால் பண்ணப்பட்டி குடகனாற்றில் குளிக்க சென்றனா். ஆழமான பகுதியில் குளித்த இவா்கள், நீரோட்டத்தின் வேகம் காரணமாக மூவரும் நீரில் மூழ்கினா். தகவலறிந்து வந்த அரவக்குறிச்சி தீயணைப்புப் படையினா் நீண்டநேர தேடுதலுக்குப் பிறகு சனிக்கிழமை மாலை மூவரின் சடலத்தையும் மீட்டு பிரேதபரிசோதனைக்கு அனுப்பி வைத்தனா். இதுகுறித்து அரவக்குறிச்சி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT