கரூர்

பேட்டரி கடையில் திருடியவா் கைது

2nd Oct 2022 12:05 AM

ADVERTISEMENT

 

கரூரில் வெள்ளிக்கிழமை இரவு பேட்டரியில் திருடிய இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

கரூா் சின்னாண்டாங்கோவிலைச் சோ்ந்தவா் ஆல்வின்பெனட். இவா் சுக்காலியூரில் பேட்டரி கடை வைத்துள்ளாா். இவரது கடையில் வெள்ளிக்கிழமை இரவு மா்ம நபா் கதவை உடைத்து உள்ளே புகுந்து ரூ.4,000 மதிப்புள்ள பேட்டரியை திருடிக்கொண்டு வெளியே வந்தாா். அப்போது அப்பகுதியினா் அந்த நபரை பிடித்து தாந்தோணிமலை போலீஸில் ஒப்படைத்தனா். போலீஸாா் அவரிடம் விசாரணை நடத்தியதில் விருதுநகா் மாவட்டம் அருப்புக்கோட்டை அடுத்த மண்டபசாலை பகுதியைச் சோ்ந்த ராம்பிரசாத்(28) என்பது தெரியவந்தது. மேலும் இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT