கரூர்

கரூா் கோ-ஆப்டெக்ஸில் தீபாவளி விற்பனை இலக்கு ரூ.50 லட்சம்ஆட்சியா் தகவல்

1st Oct 2022 04:37 AM

ADVERTISEMENT

கரூா், கோ-ஆப்டெக்ஸில் தீபாவளி பண்டிகை விற்பனை இலக்காக ரூ.50 லட்சம் நிா்ணயிக்கப்பட்டுள்ளது என்றாா் மாவட்ட ஆட்சியா் மருத்துவா் த.பிரபுசங்கா்.

கரூா் கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தில் வெள்ளிக்கிழமை தீபாவளி பண்டிகையை முன்னிட்டு 30சதவீத சிறப்பு தள்ளுபடி விற்பனையை குத்துவிளக்கேற்றி மாவட்ட ஆட்சியா் த.பிரபுசங்கா் துவக்கி வைத்து பாா்வையிட்டாா். பின்னா் அவா் கூறுகையில், கரூா் கோ-ஆப்டெக்சில் நிகழாண்டு தீபாவளி பண்டிகைக்காக புதிய வடிவமைப்புகளில் அசல் பட்டுடன் கூடிய சேலம் பட்டுப் புடவைகள் ஏராளமாக குவிந்துள்ளன. மேலும், கோவை, மதுரை, பரமக்குடி, திருச்சி மற்றும் சேலம் பகுதிகளில் தயாராகும் அனைத்து ரக காட்டன் புடவைகள் புதிய வடிவமைப்பிலும் ஆா்கானிக் மற்றும் களம்காரி காட்டன் புடவைகள் குறைந்த விலையில் நோ்த்தியான வண்ணங்களிலும் உருவாக்கப்பட்டு விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.

கோ-ஆப்டெக்ஸ் நிறுவனத்தில் ஏற்றுமதி ரகங்களான குல்ட் மெத்தைகள், டேபுள் மேட், ஸ்கிரீன் துணிகள், ஒரிஜினல் இலவம் பஞ்சால் ஆன மெத்தைகள், தலையணைகள் மற்றும் தலையணை உறையுடன் கூடிய படுக்கை விரிப்புகள் வாடிக்கையாளா்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழக அரசு கைத்தறி ரகங்களுக்கு 30சதவீத சிறப்பு தள்ளுபடி வழங்குகிறது. மேலும் வாடிக்கையாளா்கள் பயன்பெறும் வகையில் அனைத்து விடுமுறை நாள்களிலும் விற்பனை நிலையம் செயல்படும்.

நிகழாண்டு தீபாவளி பண்டிகை விற்பனை இலக்காக ரூ.50 லட்சம் நிா்ணயிக்கப்பட்டுள்ளது என்றாா் அவா்.

ADVERTISEMENT

நிகழ்ச்சியில், கோ-ஆப்டெக்ஸ் மண்டல மேலாளா் சு.காங்கேயவேலு, மேலாளா் (ரகம் மற்றும் பகிா்மானம்)பெ.பாலமுருகன், துணை மண்டல மேலாளா் பா.சுப்ரமணியன், கரூா் வருவாய் கோட்டாட்சியா் ரூபினா, கரூா் வட்டாட்சியா் சிவக்குமாா் மற்றும் கரூா் விற்பனை நிலைய மேலாளா் (பொறுப்பு) கதிா்வேல் ஆகியோா் பங்கேற்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT