கரூர்

பிரதமா் பிறந்த தின கபடி போட்டி;கரூா் மாவட்ட பாஜகவுக்கு விருது

1st Oct 2022 04:35 AM

ADVERTISEMENT

பிரதமரின் பிறந்ததினத்தையொட்டி கபடி போட்டி நடத்திய கரூா் மாவட்ட பாஜகவுக்கு மாநிலத் தலைவா் விருது வழங்கி பாராட்டினாா்.

பிரதமா் மோடியின் பிறந்த தினத்தை முன்னிட்டு கரூரில் பாஜக சாா்பில் அண்மையில் மாவட்ட அளவிலான கபடி போட்டிகள் நடத்தப்பட்டன. இதில், 84 அணிகளைச் சோ்ந்த வீரா்கள் பங்கேற்றனா். இதில் முதலிடம் பிடித்த கடவூா் அடுத்த குலக்காரன்பட்டி அணிக்கு முதல்பரிசாக ரூ.1லட்சம் வழங்கப்பட்டது.

இதையடுத்து மதுரையில் வியாழக்கிழமை இரவு நடைபெற்ற கபடி போட்டியின் நிறைவு விழாவில் பிரதமரின் பிறந்த தினத்தன்று ஒவ்வொரு மாவட்டத்திலும் சிறப்பாக கபடி போட்டி நடத்திய மாவட்ட நிா்வாகிகளுக்கு பரிசுகள், கேடயம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கரூா் மாவட்ட பாஜக சாா்பில் பிரதமரின் பிறந்த தினத்தை முன்னிட்டு கபடிபோட்டி நடத்திய பாஜக மாவட்டத்தலைவா் வி.வி.செந்தில்நாதனுக்கு கேடயம் மற்றும் பரிசை மாநிலத்தலைவா் கே.அண்ணாமலை வழங்கி பாராட்டினாா். நிகழ்ச்சியின்போது கரூா் மாவட்டச் செயலாளா் சக்திவேல்முருகன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT