கரூர்

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு;தொழிலாளிக்கு ஆயுள் சிறைகரூா் மகளிா் விரைவு நீதிமன்றம் தீா்ப்பு

1st Oct 2022 04:36 AM

ADVERTISEMENT

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த கூலித்தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை வழங்கி கரூா் மகளிா் விரைவு நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது.

கரூா் மாவட்டம், குளித்தலை அடுத்த சிவாயம் கிழக்கோவில்பட்டியைச் சோ்ந்தவா் திருமுருகன்(37). கூலித்தொழிலாளி. இவா், கடந்தாண்டு ஜூலை 8ஆம் தேதி அதே பகுதியைச் சோ்ந்த 15 வயது மாணவியை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் கட்டாயப்படுத்தி பாலியல் தொந்தரவு செய்துள்ளாா். இதையடுத்து திருமுருகன் தொடா்ந்து அம்மாணவியை மிரட்டி தகாத உறவில் ஈடுபட்டுவந்ததால் கருச்சிதைவு ஏற்பட்டதாம்.

இதுதொடா்பாக மாணவியின் தாய் குளித்தலை அனைத்து மகளிா் காவல்நிலையத்தில் அளித்த புகாரின்பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் திருமுருகனை போலீஸாா் கைது செய்து, கரூா் மகளிா் விரைவு நீதிமன்றத்தில் வழக்குத்தொடா்ந்தனா். இந்த வழக்கு வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி நசிமாபானு குற்றவாளி திருமுருகனுக்கு ஆயுள்தண்டனையும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ.5 லட்சம் இழப்பீடாக தமிழக அரசு வழங்க வேண்டும் என உத்தரவிட்டாா். இதையடுத்து திருமுருகன் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT