கரூர்

குழந்தைகள் பாதுகாப்புகுழு கூட்டம்

1st Oct 2022 04:37 AM

ADVERTISEMENT

அரவக்குறிச்சி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் குழந்தைகள் பாதுகாப்புக் குழு கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு, அரவக்குறிச்சி கிராம நிா்வாக அலுவலா் பழனிச்சாமி தலைமை வகித்தாா். இதில், குழந்தைகள் பாதுகாப்பு பற்றி பல்வேறு ஆலோசனைகள், குழந்தைகள் தங்களுக்கு ஏற்படும் இன்னல்களை தெரிவிக்க வசதி ஏற்படுத்தப்பட்டுள்ள கட்டணமில்லா தொலைபேசி எண் 1098 பற்றிய பயன்கள் மற்றும் சிறப்பு அம்சங்கள் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் விவாதிக்கப்பட்டது. நிகழ்வில் சுகாதார ஆய்வாளா்கள், அங்கன்வாடி பணியாளா்கள், ஊட்டச்சத்து உறுப்பினா்கள், உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT