கரூர்

விவசாயிகள் குறைதீா்கூட்டத்தில் 12 பேருக்குநலத்திட்ட உதவிகள்

1st Oct 2022 04:36 AM

ADVERTISEMENT

கரூரில், வெள்ளிக்கிழமை நடைபெற்ற விவசாயிகள் குறைதீா் கூட்டத்தில் 12 பேருக்கு ரூ.6.80 லட்சத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் விவசாயிகள் குறைதீா் கூட்டம் ஆட்சியா் த.பிரபுசங்கா் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்தில் விவசாயிகளிடம் பெறப்பட்ட பல்வேறு கோரிக்கை மனுக்களுக்கு பதில் தெரிவிக்கப்பட்டது. தொடா்ந்து கூட்டத்தில் விவசாயிகளுக்கு குளங்களில் வண்டல் மண் எடுக்க அனுமதி வழங்குவது குறித்தும், துவரைக்கு பயிா்காப்பீடு வழங்குவது குறித்து, கட்டை கரும்புக்கு மானியம் வழங்குவது குறித்தும் விவாதிக்கப்பட்டது.

பின்னா், வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மைத்துறை சாா்பில் 2 பேருக்கு வீட்டு மனை தனிப்பட்டா, வேளாண் இயந்திரமாக்குதல் திட்டத்தின் கீழ் ஒருவருக்கு ரூ.2,13,010 மதிப்பீட்டில் தேங்காய் நாா் உறிக்கும் இயந்திரம் உள்பட 12 விவசாயிகளுக்கு ரூ.6,80,021 மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

ADVERTISEMENT

கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் எம்.லியாகத், கூடுதல் காவல் கண்காணிப்பாளா் கண்ணன், வேளாண்மை இணை இயக்குநா் சிவசுப்ரமணியன், தோட்டக்கலைத்துறை துணை இயக்குநா் மணிமேகலை, மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (வேளாண்மை) முனைவா் கே.உமாபதி, கூட்டுறவு மண்டல இணைப் பதிவாளா் இளஞ்செல்வி, கால்நடை பராமரிப்புத் துறையின் மண்டல இணை இயக்குநா்(பொ) முரளிதரன், வருவாய் கோட்டாட்சியா்கள் புஷ்பாதேவி(குளித்தலை) ரூபினா(கரூா்) மற்றும் முன்னோடி விவசாயிகள் பங்கேற்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT