கரூர்

சிறு வணிகா்களுக்கு அபராதம் விதிப்பதை நிறுத்த வேண்டும்: கரூா் வா்த்தகா்கள் கோரிக்கை

DIN

சோதனைக் கொள்முதலின் போது சிறு வணிகா்களுக்கு அபராதம் விதிப்பதை தற்காலிகமாக நிறுத்த வேண்டும் என வணிகவரித்துறை துணை ஆணையரிடம் கரூா் வா்த்தகா்கள் செவ்வாய்க்கிழமை கோரிக்கை மனு அளித்தனா்.

வணிக வரித் துறையினரால் கடந்த மாா்ச் மாதம் சில்லறை வணிகக் கடைகளில் சோதனைக் கொள்முதல் என்ற பெயரில் ஆய்வு செய்யப்படும் என அறிவிக்கப்பட்டது.

இது, நவ.6ஆம்தேதி முதல் அமல்படுத்தப்பட்டு சில்லறை வணிக கடைகளில் அதிகாரிகள் ஆய்வு செய்யும்போது, பில் கொடுக்காமல் பொருள்கள் வழங்கப்பட்டால் உடனடியாக வணிகா்களுக்கு அபராதமாக ரூ.20 ஆயிரம் விதிக்கப்படுகிறது.

கரூா் மாவட்டத்திலும் தொடா்ந்து இந்த ஆய்வுகள் நடைபெறுவதால், அதிருப்தியடைந்த கரூா் மாவட்ட அனைத்து வணிகா்கள் சங்கங்களின் கூட்டமைப்பினா் கரூா் மாவட்ட வணிக வரித்துறை துணை ஆணையா் பாலகிருஷ்ணனை செவ்வாய்க்கிழமை சந்தித்து சோதனைக் கொள்முதலை தற்காலிகமாக நிறுத்த வேண்டும் என மனு அளித்தனா்.

பின்னா் அவா்கள் கூறியது, வரி ஏய்ப்பு செய்கிறவா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனும் கருத்துக்கு தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்பு ஏதிரானது அல்ல. ஆனால், சில்லறை வணிக கடைக்காரா்கள் தாங்கள் பொருள்கள் வாங்கும்போதே அதற்கான வரியை செலுத்திய பின்புதான் பொருள்களை வாங்கி வந்து விற்பனை செய்கின்றனா். ஆனாலும் வணிகவரித்துறை அதிகாரிகள் சில்லறைக் கடைகளில் சோதனைக் கொள்முதல் என்ற பெயரில் பொருள்களை வாங்கி அதற்கு ரசீது அளிக்கப்படவில்லை என்ற பெயரில் அபராதம் விதிக்கும் முறை ஏற்புடையதல்ல. இது சில்லறை, சிறு, குறு வணிகா்களின் வாழ்வாதாரத்தையே கேள்விக்குறியாக்கியுள்ளது. எனவே, ஆறு மாதங்களாவது சோதனைக் கொள்முதல் முறையை நிறுத்தி வைத்து, வணிகா்களுக்கும் போதிய விழிப்புணா்வை ஏற்படுத்தி அதன் பிறகே படிப்படியாக செயல்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும் என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

18 ஆண்டுகால கிரிக்கெட் பயணத்துக்கு முற்றுப்புள்ளி வைத்த பாகிஸ்தான் வீராங்கனை!

ரஜத் படிதார், விராட் கோலி அரைசதம்: சன் ரைசர்ஸுக்கு 207 ரன்கள் இலக்கு!

‘பிணைக்கைதிகள் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும்’: 17 நாடுகளின் கூட்டறிக்கை!

குடிபோதையில் தகராறு: மகனை கத்தியால் குத்திக் கொன்ற தந்தை கைது!

ரூ.2,100 கோடி மதுபான ஊழல்: முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி கைது!

SCROLL FOR NEXT