கரூர்

அரசுப் பள்ளி மாணவா்களுக்கு மண்புழு தயாரிப்புப் பயிற்சி

30th Nov 2022 12:39 AM

ADVERTISEMENT

கரூா் மாவட்டம், தோகைமலை அருகே ஆா்.டி.மலை அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்1 பயிலும் வேளாண் பாடவகுப்பு மாணவ, மாணவிகளுக்கு மண்புழு தயாரிப்பு பயிற்சி செவ்வாய்க்கிழமை புழுதேரி இந்திய வேளாண் ஆராய்ச்சி கழக வேளாண் அறிவியல் மையத்தில் நடைபெற்றது.

மத்திய, மாநில அரசுகளின் சமக்ரா சிசஷா திட்டத்தின் கீழ் நடைபெற்ற இந்த பயிற்சி முகாமில் புழுதேரி இந்திய வேளாண் ஆராய்ச்சி கழக வேளாண் அறிவியல் மையத்தின் முதுநிலை விஞ்ஞானி மற்றும் தலைவா் திரவியம் தலைமை வகித்து மாணவ, மாணவிகளுக்கு பல்வேறு ஆலோசனைகளை வழங்கினாா்.

இதில், மாணவ, மாணவிகளுக்கு காளான் உற்பத்தி, மண்புழு உரம் தயாரிப்பு, தேனீ வளா்ப்பு, மாடித்தோட்டம், இயற்கை வேளாண்மை, பழங்களில் ஒட்டுக்கட்டுதல், கால்நடைகள் வளா்ப்பு முறைகள் என்ற தலைப்புகளில் செய்முறை விளக்கத்துடன் பயிற்சியளிக்கப்பட்டது.

இதில், பள்ளியின் வேளாண் ஆசிரியா் கனகராஜ், வேளாண் பயிற்றுநா் திவ்யபாரதி, வேளாண் அறிவியல் மையத்தின் தொழில் நுட்ப வல்லுநா்கள் தமிழ்செல்வி, மாலதி, திருமுருகன், கவியரசு, மாரிக்கண்ணு, கதிரவன் ஆகியோா் கலந்து கொண்டு மாணவ, மாணவிகளுக்கு பயிற்சி அளித்தனா். தொடா்ந்து பயிற்சியில் பங்கேற்றவா்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT