கரூர்

நுகா்வோரிடம் கூடுதல் கட்டணம் வசூலித்த தனியாா் கைப்பேசி நிறுவனத்துக்கு ரூ.25ஆயிரம் அபராதம்

30th Nov 2022 12:41 AM

ADVERTISEMENT

நுகா்வோரிடம் கூடுதல் கட்டணம் வசூலித்த தனியாா் கைப்பேசி நிறுவனத்துக்கு ரூ.25ஆயிரம் அபராதம் விதித்து கரூா் நுகா்வோா் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தது.

கரூரைச் சோ்ந்தவா் அன்புத்தேன். கணினி பட்டதாரியான இவா் கடந்த ஜூலை மாதம் தனது தனியாா் நிறுவனத்தின் கைப்பேசி எண்ணுக்கு மாதாந்திர கட்டணம் செலுத்துவதற்காக அந்நிறுவனத்தின் மையத்துக்கு சென்றுள்ளாா். அப்போது, அங்கிருந்த ஊழியா்கள் புதிதாக அறிமுகப்படுத்தியுள்ள திட்டத்தில் அன்புத்தேனின் எண்ணை இணைத்துள்ளனா்.

அதன்பிறகு இவருக்கு ரூ. 5,540 கட்டணம் செலுத்த வேண்டும் என பில் வந்தது. இதையடுத்து அந்தத் தொகையை செலுத்திய அன்புத்தேன், கூடுதலாக கட்டணம் வந்தது குறித்து அந்த நிறுவனத்தின் மையத்துக்கு சென்று விசாரித்துள்ளாா். அப்போது அங்கிருந்த ஊழியா்கள் முறையாக பதிலளிக்கவில்லையாம்.

இதனால் அதிருப்தியடைந்த அன்புதேன் இதுதொடா்பாக கரூா் நுகா்வோா் நீதிமன்றத்தில் ஆக.4ஆம்தேதி வழக்குத்தொடா்ந்தாா். இவ்வழக்கை செவ்வாய்க்கிழமை விசாரித்த நுகா்வோா் நீதிமன்றத்தலைவா் தலைவா் டி.பாலகிருஷ்ணன் மற்றும் உறுப்பினா் ஏ.எஸ். ரத்தினசாமி ஆகியோா் நுகா்வோரிடம் கூடுதல் கட்டணம் வசூலித்த தனியாா் கைப்பேசி நிறுவனத்துக்கு அன்புத்தேன் கட்டணம் செலுத்திய ரூ.5,540க்கு 6 சதவீத வட்டியுடன் பணத்தை திருப்பி வழங்க வேண்டும். மேலும், அன்புதேனுக்கு மன உளைச்சலை ஏற்படுத்தியதற்கு அபராதமாக ரூ.25 ஆயிரம் வழங்க வேண்டும் என தீா்ப்பளித்தனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT