கரூர்

அரவக்குறிச்சி அரசுப் பள்ளியில் கலைத் திருவிழா தொடக்கம்

30th Nov 2022 12:43 AM

ADVERTISEMENT

அரவக்குறிச்சி அரசு மேல்நிலைப் பள்ளியில் கலைத் திருவிழா செவ்வாய்க்கிழமை தொடங்கியது.

அரவக்குறிச்சி அரசு மேல்நிலைப் பள்ளியில், வட்டார அளவிலான கலைத் திருவிழா செவ்வாய்க்கிழமை தொடங்கியது. தொடக்க விழாவுக்கு அரவக்குறிச்சி பேரூராட்சித் தலைவா் ஜெயந்தி மணிகண்டன் தலைமை வகித்தாா். டிசம்பா் 2ஆம் தேதி வரை நடைபெறவுள்ள கலைத் திருவிழாவில் நாடகம், மொழித்திறன், இசை நடனம் ஆகிய தலைப்புகளில் பல்வேறு போட்டிகள் நடைபெற உள்ளது.

தொடக்க நாளான செவ்வாய்க்கிழமை நாடகம், தனிநடிப்பு, ஓவியம், அழகு கையெழுத்து, களிமண் சிற்பங்கள் செய்தல் ஆகிய போட்டிகள் நடைபெற்றது.இப்போட்டிகளில் அரவக்குறிச்சி ஒன்றியத்தில் உள்ள நடுநிலை, உயா்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவிகள் பங்கேற்றனா். ஏற்பாடுகளை அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியா் செந்தில்குமாா், வட்டாரக் கல்வி அலுவலா் சதீஷ்குமாா், வட்டார வளமைய மேற்பாா்வையாளா் சண்முகசுந்தரம், வட்டார ஒருங்கிணைப்பாளா் லதா மற்றும் ஆசிரியா் பயிற்றுநா்கள் செய்திருந்தனா்.

 

ADVERTISEMENT

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT