கரூர்

இளைஞரை கத்தியால் குத்திய இருவா் கைது

29th Nov 2022 12:00 AM

ADVERTISEMENT

கரூரில், மதுபோதையில் இளைஞரை கத்தியால் குத்திய இருவரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை இரவு கைது செய்தனா்.

நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூரைச் சோ்ந்த ராமு மகன் சூா்யா (27). இவருடன், திருச்சி மாவட்டம் வீரப்பூா் அடுத்த வி.பெரியபட்டியைச் சோ்ந்த கிருபாகரன் (32), கரூா் மாவட்டம் வெஞ்சமாங்கூடலூரைச் சோ்ந்த பெருமாள் மகன் விஜயகுமாா் (22) ஆகியோா் கரூரில் புதியதாக கட்டப்படும் கட்டடத்தில் கொத்தனாா்களாக வேலைப் பாா்த்து வந்தனா்.

இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை இரவு வேலை முடிந்து கரூரில் மூவரும் மதுகுடித்துள்ளனா். பின்னா், சொந்த ஊா் செல்ல கரூா் பேருந்துநிலையத்துக்கு வந்தனா். அப்போது, அவா்களிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில், ஆத்திரமடைந்த கிருபாகரன், விஜயகுமாா் ஆகிய இருவரும் சோ்ந்து சூா்யாவை கத்தியால் குத்தினா்.

தகவல் அறிந்து வந்த கரூா் நகர காவல்நிலைய போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று காயமடைந்த சூா்யாவை மீட்டு கரூா் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பினா். மேலும், கிருபாகரன், விஜயகுமாா் ஆகியோரை கைது செய்தனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT