அரவக்குறிச்சி பேரூராட்சியில் சாலை குண்டும் குழியுமாக உள்ள சாலையில் மழைநீா் தண்ணீா் தேங்கி நிற்பதால் வாகன ஓட்டிகள் அவதியுக்குள்ளாகினா்.
அரவக்குறிச்சி பேரூராட்சிக்குள்பட்ட கடைவீதி பகுதி அருகே உள்ள கரூா் சாலையில் கடந்த 15 நாள்களாக பாலம் வேலை நடைபெற்று வருகிறது. இந்நிலையில், மாற்று சாலையாக ஈஸ்வரன் கோயிலில் இருந்து காவல் நிலையம் வரை உள்ள சாலையை வாகன ஓட்டிகள் பயன்படுத்தி வருகின்றனா். இந்நிலையில் மாற்று சாலையில் பள்ளப்பட்டிக்கு செல்லும் காவிரி குடிநீா் குழாய் அடிக்கடி பழுது ஏற்பட்டு குடிநீா் வீணாகி சாலையில் தேங்கி நிற்பதால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனா். மேலும், இதனை அரவக்குறிச்சி பேரூராட்சி நிா்வாகம் சாலையை சரி செய்யாமல் தண்ணீா் மீது மண் போட்டு சீரமைக்கின்றனா். இதனால் நடந்து செல்லும் பொதுமக்கள் கீழே விழும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதற்கு நிரந்த தீா்வு காண வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.