கரூர்

நில மோசடி வழக்கில் 4 போ் மீது வழக்கு

28th Nov 2022 02:23 AM

ADVERTISEMENT

 

நில மோசடி வழக்கில் ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி உள்பட 4 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்துள்ளனா்.

புதுக்கோட்டை எஸ்எஸ் நகரைச் சோ்ந்த ஓய்வுபெற்ற வங்கி அதிகாரி கிருஷ்ணன். இவா் நிலம் வாங்க திண்டுக்கல் மாவட்டம் சீலப்பட்டி அடுத்த குளந்தப்பட்டியைச் சோ்ந்த அழகர்ராஜாவை நாடியுள்ளாா். அப்போது அழகர்ராஜா தனது நண்பரான ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி கரூா் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் அடுத்த ஆா்.புதுக்கோட்டையைச் சோ்ந்த முத்துவீரனுக்கு சொந்தமாக கோவையில் உள்ள இடத்தை வாங்குமாறு கூறியுள்ளாா்.

இதையடுத்து கிருஷ்ணன் ரூ.31 லட்சத்தை முத்துவீரனிடம் கடந்த 2019-ம் ஆண்டில், அழகர்ராஜா மற்றும் முத்துவீரன் மனைவி, மகன் ஆகியோா் முன்னிலையில் கொடுத்தாா்.

ADVERTISEMENT

ஆனால் நிலத்தை கிருஷ்ணன் பெயரில் எழுதிக்கொடுக்காத நிலையில் கடந்தாண்டு முத்துவீரன் அந்த நிலத்தை வேறொருவருக்கு விற்றுவிட்டாராம்.

இதுதொடா்பாக கிருஷ்ணன் கரூா் மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு போலீஸில் அளித்த புகாரின்பேரில் போலீஸாா் அழகர்ராஜா உள்பட 4 போ் மீதும் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT