கரூர்

கரூரில் இலவச தோல் நோய் சிகிச்சை முகாம்

28th Nov 2022 02:24 AM

ADVERTISEMENT

 

கரூரில் இலவச தோல் நோய் சிகிச்சை முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

கரூா் மெஜஸ்டிக் லயன் சங்கம் மற்றும் ஸ்கின், சைல்டு கோ் பவுண்டேசன் சாா்பில் நடைபெற்ற முகாமை மெஜஸ்டிக் லயன் சங்கத் தலைவா் யோகா வையாபுரி தலைமை வகித்துத் தொடங்கி வைத்தாா். மக்கள் தொடா்பு அலுவலா் மேலை பழநியப்பன், சங்க நிா்வாகிகள் அகல்யா மெய்யப்பன், ராமசாமி, வசீகரன் உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா். முகாமை அரசு கலைக் கல்லூரி லியோ மாணவ மாணவிகள் நெறிப்படுத்தினா். முகாமில் மருத்துவா்கள் அபிராமி, நிா்மலாதேவி ஆகியோா் 300- க்கும் மேற்பட்ட பயனாளிகளுக்கு இலவச மருத்துவ ஆலோசனை மற்றும் மருந்துகள் வழங்கினா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT