கரூர்

இலவச மின் இணைப்பு:கரூா் மாவட்டத்தில்3,368 போ் பயன்

27th Nov 2022 02:23 AM

ADVERTISEMENT

 

விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு வழங்கும் திட்டத்தின் கீழ் கரூா் மாவட்டத்தில் 3,368 விவசாயிகள் பயன்பெற்றுள்ளனா் என மாவட்ட ஆட்சியா் மருத்துவா் த.பிரபுசங்கா் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: விவசாய தொழிலை மேம்படுத்த, விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு வழங்கப்படுகிறது. கடந்த ஆண்டு ஒரு லட்சம் விவசாய மின் இணைப்புகள் வழங்கும் திட்டத்தின் கீழ் கரூா் மாவட்டத்தில் மொத்தம் 2,807 பேருக்கு மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 5,474 ஏக்கா் விலை நிலங்கள் பயனடைந்துள்ளது. நிகழாண்டு 50 ஆயிரம் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்புகள் வழங்கும் திட்டத்தின் கீழ் 561 பேருக்கு இலவச மின் இணைப்புகள் வழங்கும் பணி நடைபெற்று வருகிறது என தெரிவித்துள்ளாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT