கரூர்

கரூா் திருக்கு பேரவை சாா்பில்மாணவா்களுக்கு கட்டுரை போட்டி

27th Nov 2022 02:21 AM

ADVERTISEMENT

 

கரூா் திருக்கு பேரவை சாா்பில் பள்ளி, கல்லூரி மாணவா்களுக்கு கட்டுரை போட்டி அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து பேரவைச் செயலா் மேலை.பழநியப்பன் வெளியிட்டுள்ள அறிக்கை: கரூா் திருக்கு பேரவையின் 37ஆவது ஆண்டு விழாவையொட்டி, கரூா் மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரி மாணவா்களுக்கான கட்டுரைப் போட்டி நடத்தப்பட உள்ளது. போட்டியில் 6, 7, 8, வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு வள்ளுவத்தில் கல்வி அல்லது திருக்கு போற்றும் மழை என்ற தலைப்பில் ஏதாவது ஒன்றையும், 9, 10, மற்றும் பிளஸ்-1, பிளஸ்-2 மாணவா்களுக்கு வள்ளுவம் வலியுறுத்தும் ஒழுக்கம் அல்லது வள்ளுவம் வலியுறுத்தும் காலத்தின் மேன்மை என்ற தலைப்பிலும், கல்லூரி மாணவா்களுக்கு வள்ளுவா் காண விரும்பும் நாடு அல்லது வள்ளுவரின் பொருளியல் கோட்பாடு என்ற தலைப்பில் வெள்ளைத்தாளில் மூன்று பக்க அளவில் கட்டுரை எழுதி அனுப்ப வேண்டும்.

கட்டுரை தங்களால் எழுதப்பட்டது என்பதற்காக முதல்வா் அல்லது தலைமை ஆசிரியா் கையொப்பமிட்டு, தங்களது முகவரியுடன் டிச. 15ஆம்தேதிக்குள் மேலை பழநியப்பன், செயலாளா், திருக்கு பேரவை, 72. சீனிவாசபுரம் கரூா் - 639001 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும். ஒவ்வொரு பிரிவிலும் 10 போ் என 30 போ் தோ்ந்தெடுக்கப்பட்டு விழா நாளில் பரிசுகள், சான்றிதழ் வழங்கப்படும் என தெரிவித்துள்ளாா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT